இலங்கை

மகிந்த ராஜபக்சவுக்காக சரத் என் சில்வா செய்த அட்டூழியங்கள்!

ஞானசார தேரரின் சிறைப்படுத்தல் மற்றும் காவியுடை தொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் நந்த சில்வாவின் கருத்து பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக் கருத்து நீதிமன்ற அவமதிப்பு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.முன்னாள் நீதியரசர் சரத் ஒரு காலத்தில் சட்டத்தரணியாக சொலிசிட்டர் ஜெனரலாக- அட்டர்னி ஜெனரலாக- பிரதம நீதியரசராகப் பதவிகளை வகித்தவர்.

சட்டத்தின் ஆட்சியை விமர்சிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தனது ஆட்சிக் காலத்தில் தூய்மையான- ஒழுக்கமான ஒருவராக செயற்பட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.சாத்தான் வேதம் ஓதுவது போல் தெரிகிறது.

சரத் என் சில்வாவுக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையே மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சிரந்தி ராஜபக்ச ஆகியோரின் திருமணத்திலிருந்தே இவரின் பெயர் அடிபடுகிறது.

மகிந்த ராஜபக்சவும் சரத் என் சில்வாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கோகில தேவி வீரதுங்க சரத் என் சில்வாவின் தாயார் மஹிந்தவின் தாயாருக்குச் சிரந்தி ராஜபக்சவைப் பற்றிய திருமண யோசனையைக் கூறியுள்ளார். மஹிந்தவும் அதற்குச் சம்மதித்துள்ளார்.

சிரந்தி தும்முல்ல பகுதியில் டென்னிஸ் விளையாடுவதற்காகச் செல்வது வழக்கம் என்பதால் மகிந்த அவரைப் பார்ப்பதற்காகச் சில சந்தர்ப்பங்களில் சரத் நந்த சில்வாவின் காரில் சென்றுள்ளார்.

அவர்களைத் திருமணம் செய்துவைப்பதற்கான அடிப்படை அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் கூட சரத் நந்த சில்வா இருந்துள்ளார். இந்த நெருக்கம் மகிந்தவின் பல வழக்குகளை திசை திருப்பி மகிந்தவை காப்பற்ற வழிசமைத்துள்ளது. 80களின் மத்திய பகுதியில் நடைபெற்ற முல்கிரிகல இடைத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்தத் தேர்தலின்போது மகிந்தவும் மேலும் சிலரும் இணைந்து தங்கள் எதிரிகளான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கப்புகனத்தகே பிரேமதாச மற்றும் பேதுரு ஆராச்சிகே நிலவீர ஆகிய இருவரைக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

இச்சம்பவம் 1985 செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. இது குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியது. மகிந்த உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.

மகிந்த ராஜபக்சவுக்காக சரத் என் சில்வா செய்த அட்டூழியங்கள்! | Sarath N Silva Mahinda Rajapaksa

பின்னர் பொலிஸார் விசாரணைகளை நடத்தி மகிந்த ராஜபக்ச – தேவகே கின்தாச – ஆரிய சுமனபால ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் கோப்பு வழக்குத் தொடர்வதற்காக அட்டர்னி ஜெனரல் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டது.

அப்போது அட்டர்னி ஜெனரல் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியில் இருந்தவர்தான் இந்த சரத் நந்த சில்வா.

அந்த விசாரணைக் கோப்பு அவரது கைக்குத்தான் கிடைத்தது. அந்த விசாரணைக் கோப்பை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆதாரங்கள் மற்றும் தகவல்களை மகிந்த ராஜபக்சவுக்குச் சாதகமான முறையில் அவர் தயார் செய்தார்.

மகிந்தவுக்கு சார்பான தீர்ப்புகள்

வழக்கில் மிகவும் விசித்திரமான ஒரு விடயம் நடந்தது:மஹிந்த ராஜபக்ச விடுவிக்கப்பட்டார்.மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த சாட்சிகள் இருவர் ‘பொய்சாட்சியம் அளித்தனர்’ எனக் கூறி அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. சாட்சிகள் இருவருக்கும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் நீதிபதியாக இருந்த மகாநாம திலகரத்னவின் கொலை வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது குறித்துப் புலனாய்வு செய்து அட்டர்னி ஜெனரல் சரத் நந்த சில்வாவின் ஆலோசனையைப் பெற்றது.

மகிந்த ராஜபக்சவுக்காக சரத் என் சில்வா செய்த அட்டூழியங்கள்! | Sarath N Silva Mahinda Rajapaksa

குற்றஞ்சாட்டப்பட்ட மகாநாம திலகரத்னவைக் கைது செய்ய பொலிஸ் சென்றது. ஆனால் அதற்கு முன்பே அவர் தனது வழக்கறிஞர்கள் மூலமாக கெஸ்பேவ நீதிமன்றத்தில் சரணடைந்து பிணை பெற்றார்.

குறித்த மகாநாம திலகரத்ன தான் மகிந்தவின் வழக்கை விசாரித்தவர்.சில்வாவின் நெருங்கிய நண்பர். ஆனால் பிணை பெற்ற விடயம் தெரியாமல் CID அவரை அன்று இரவு கைது செய்து அழைத்துச் சென்றது.

இதனால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி மகாநாம திலகரத்ன உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கு விசாரணையின் இறுதியில் CID தரப்பு தவறு இழைத்துள்ளதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

‘ஹெல்ப்பின் ஹம்பாந்தோட்டை’ (Helping Hambantota) ஊழல் வழக்கில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த சரத் நந்த சில்வா மகிந்த ராஜபக்சவை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவித்ததுடன் மாறாகப் முறைப்பாடு செய்த கபீர் ஹாஷின் மற்றும் விசாரணை அதிகாரிகளான சந்திரா பெர்னாண்டோ- லயனல் குணதிலக ஆகியோரை மகிந்த ராஜபக்சவுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டார்.

நீதித்துறையின் உச்சப் பதவிகளில் இருந்தவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றினர் என்பது தெளிவாகிறது.’ஹெல்ப்பின் ஹம்பாந்தோட்டை’ வழக்கு தொடர்பில் சரத் என் சில்வா பகிரங்க மன்னிப்பும் கேட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *