காவி உடை பலவந்தமாக நீக்கமா? கம்மன்பிலவிடம் விசாரணைகள்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடை பலவந்தமாக நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவி உடை பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அதனை பலம்மிக்க ஒருவர் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்தாகவும் முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இவர் கூறியிருப்பது சிறிய விடயமல்ல. அவர் நேரடியாக பார்த்ததை போன்று விபரித்து ஊடகங்களுக்கு கூறியுள்ளார். இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் பொலிஸார் விசாரணைகள் நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவருவர் என்றார்.
![]()