கவிதைகள்

“என்றுமே தந்திடுவாய் இலக்குமித் தாயே” …. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண்   ….. ஆஸ்திரேலியா
 
அளவுக்கு மிஞ்சிப் பொருளெனக்கு வேண்டாம்
அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா
ஆசையும் அளவோடு அமைந்து விடவேண்டும்
அம்மாவுன் திருவடியே அடைக்கலமே அம்மா
 
அன்றாடம் சீவிக்கும் அளவுக்குப் பொருளும்
அடுத்தவர்க்குக் கொடுப்பதற்கு அளவுக்குப் பொருளும்
கேட்டவர்க்குக் கொடுப்பதற்கு அளவான பொருளும்
கிடைத்துவிட வழிவகுப்பாய் இலக்குமித் தாயே
 
மாடிமனை வீடுநிலம் வேண்டாமே தாயே
மழைவெயிலுக் கொதுங்கிவிட  வீடுதா தாயே 
ஏழ்மையிலும் இரந்திடா வாழ்ந்துவிடும் வாழ்வை
என்றுமே தந்திடுவாய் இலக்குமித் தாயே
 
பேராசை எழாவண்ணம் பார்த்திடுவாய் தாயே
பெரும்பொருளை எண்ணாமல் செய்திடுவாய் தாயே
உற்றவர்க்கு ஊரார்க்கு உதவிவிடும் வகையில்
உன்னருளால் செல்வத்தை உவந்தளிப்பாய் தாயே !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *