இலங்கை

திட்டமிட்டு ஷிரந்தியை சிறையில் அடைந்த அநுர – 2 வருடங்களுக்கு முன்னர் சபதம்

முன்னாள் முதற்பெண் ஷிரந்தி ராஜபக்சவை, அப்போதைய ஆட்சியாளர்கள் திட்டமிட்ட வகையில் காப்பாற்றியுள்ளதாகவும், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டு வருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உரையாற்றும் போது இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதனை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக அநுர குமார திசாநாயக்க உரையாற்றுகையில்,

ஷிரந்திக்கு எதிரான குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், மோசடியாளர்கள், குற்றவாளிகள் எவரும் தப்ப மாட்டார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

டிபெண்டர் வாகனம் ஒன்று ஷிரந்தி ராஜபக்சவுக்கு ஒப்படைக்கப்பட்டதனை உறுதி செய்யும் புகைப்படம் எங்களிடம் உள்ளது.

அந்த டிபெண்டர் வாகனம் தாஜுடீன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதனை குற்ற விசாரணை பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விசாரணைகள் முறையாக இடம்பெற்றிருந்தால் ஷிரந்தி ராஜபக்ச கைது அப்போதே கைது செய்யப்பட்டிருப்பார்.

எனினும் ஷிரந்தி ராஜபக்ச முதல் பெண்மனி என கூறி அவரை கைது செய்யாமல் இருப்பதற்கு அப்போதைய அமைச்சரவை முடிவு செய்தது.

ரணிலால் காப்பாற்றப்பட்ட ஷிரந்தி
அப்போதைய காலகட்டத்தில் சமல் ராஜபக்ச சபாநாயகராக செயற்பட்டார். அப்போதே ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரிகள் அழைப்பானை விடுத்தனர்.

எனினும் அப்போதைய பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, ஷிரந்தியை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அப்போது ஷிரந்தியை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அனுப்ப வேண்டாம். பெண் அதிகாரியை வீட்டிற்கு அனுப்புவதாக கூறி, ரணில் விக்ரமசிங்க அவரை காப்பாற்றினார் என அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

சமகாலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியில், அவர் குறிப்பிட்டது போன்று, ஷிரந்தி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு நிலையில், அடுத்து வரும் கொலை வழக்கிலும் ஷிரந்தி கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *