உலகம்

139 புலம்பெயர்ந்தோரை பலியெடுத்த கோர விபத்து ; தீவிரமாகும் தேடுதல் பணி

ஜிபூட்டியிலிருந்து யேமன் நோக்கி 305 புலம்பெயர்ந்தோருடன் சென்ற படகு ஒன்று, ஜிபூட்டி கடற்கரைக்கு அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல்களின்படி, படகின் கொள்ளளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 139 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் 82 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 84 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவுக்குச் செல்ல முயலும் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர், இதுபோன்று மனித கடத்தல்காரர்களின் வலையில் சிக்கிப் பலியாவதாக சர்வதேச அமைப்புகள் மேலும் கவலை தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *