இலங்கை

சிறையிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!; நாமல் வைத்த முக்கிய கோரிக்கை என்ன?

விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒக்டோபர் 9ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில்,2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக,பாடப்புத்தகங்கள்,எழுதுபொருட்கள்,கல்வி உபகரணங்கள், மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வரிகளை குறைக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

குறிப்பாக,உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்,முட்டை,மற்றும் குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிச்சலுகைகளை தேர்தல் வாக்குறுதிகளுடன் இணைத்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்க்கைச் செலவு மற்றும் கல்விச் செலவு அதிகரித்துள்ள நிலையில்,இந்த வரிச்சலுகைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *