பலதும் பத்தும்

AI காணொளியால் பறிபோன முதலிடம்!

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளியை சமர்ப்பித்ததன் மூலம் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, புகழ்பெற்ற நிக்கொன் (Nikon) அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் நிங் ஷு (Dr Ning Xu) சமர்ப்பித்த, சுவாசக் கோளாறுள்ள குழந்தையின் ‘சிலியா’ எனப்படும் நுண்ணிய மயிர் போன்ற அமைப்புகள் அசைவதை காட்டும் காணொளியே முதலிடத்தைப் பெற்றிருந்தது.

எனினும், இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் நடுவர்கள் நிக்கொன் நிறுவனத்திடம் முறைப்பாடளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வுக்குப் பின் வெற்றியாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிக்கொன் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தான் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டதாகக் கூறியுள்ள வெற்றியாளர், விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *