இலங்கை

சிறையில் இருக்கும் ஷிரந்திக்கு விசேட சலுகை

சிரிலிய சவிய நிதிய மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த நிதி மோசடி தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கான உணவை வீட்டிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் திணைக்களம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *