இலங்கை

அனோஜனுக்கான மேன்முறையீடு தயார்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அங்கு பணியாற்றிவந்த இலங்கையரான அனோஜன் சிவராசாவின் தண்டனை தொடர்பாக அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேன்முறையீட்டு மனுவை சட்டக் குழுவினர் தயாரித்து முடித்துள்ளனர்.

இலங்கைச் சட்டத்தரணிகள் குழுவுடன் நடத்தப்படும் ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த மேன்முறையீட்டு மனுவை மிக விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் மத நிந்தனை கருத்துக்களைப் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனோஜன் சிவராசாவுக்குச் சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், முன்னதாக அந்த நாட்டின் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று இவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதித்திருந்தது.

எனினும், சவூதி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி இவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *