இலங்கை

40 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் – உடனடி விசாரணை கோரி சபையில் பிரேரணை சமர்ப்பிப்பு

1983 ஆம் ஆண்டு “கறுப்பு ஜூலை” யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில்இடம்பெற்ற அமர்வின்போதே அவர் இந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளார்.

40 வருடங்களாக பதில் கிடைக்காத கேள்விகள்

தனிநபர் பிரேரணையை முன்வைத்து அவர் மேலும் உரையாற்றுகையில், 1983 கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், இன மோதல்கள் என்பன நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது மிக மோசமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

40 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் - உடனடி விசாரணை கோரி சபையில் பிரேரணை சமர்ப்பிப்பு | Black July 1983

 

இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டும், சொத்துக்கள் அழிக்கப்பட்டும் உள்ள நிலையில், இந்த வன்முறைகளை வழிநடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

அத்துடன், பரந்துபட்ட சுயாதீன விசாரணை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இன மோதல்களும் வன்முறைகளும் இனி இப்பூமியில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதும், நாட்டின் சகல இனக்குழுமங்களுக்குமிடையே நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியதும் இன்றியமையாதது என்பதால், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *