இலங்கை

தனிமையில் மகிந்த! பரிதாப நிலையில் ஷிரந்தி

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனிமை எனும் சிறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவித்து வருகிறார்.

சிறைச்சாலையில் சாதாரண கைதிகளுடன் ஷிரந்தி ராஜபக்சவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பரிதாப நிலையில் ஷிரந்தி
அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினாலும் தனது தாயாரான ஷிரந்தி ராஜபக்ச கைவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நாமல் தனது பிரசார நடவடிக்கைகளுக்காக பேணிவரும் பை தக்ஸலாவ மற்றும் இராஜ் ஷோ ஆகிய சமூக வலைத்தள தளங்களில் ஷிரந்தியின் கைது தொடர்பான எந்தவொரு எதிர்ப்பு பதிவுகளும் வெளியிடப்படவில்லை.

இன்று காலை வரை அந்த யூடியூப் தளங்களில் ஷிரந்தி ராஜபக்ச குறித்து எந்தவொரு பதிவும் பதிவிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தில் மகிந்த
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களை அழைத்து, ஷிரந்தி ராஜபக்ச தனது கட்சியின் உறுப்புரிமை பெற்றவர் அல்லவென்று தெரிவித்திருந்தார்.

நாமல் ராஜபக்சவின் சமூக வலைத்தளப் பிரசாரகர்களும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை.

இதனால் குடும்பத்திற்குள் ஷிரந்தி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மகிந்த மிகவும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கைது செய்யப்பட்ட தாய் மற்றும் சகோதரனை ஏனைய சகோதர்களான யோசித ராஜபக்ச, ரோகித்த ராஜபக்ச இதுவரை சென்று பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *