உலகம்

எங்கள் எதிர்காலத்தைக் கனடியர்களே தீர்மானிப்பார்கள்”; எலான் மஸ்கிற்கு கார்னி கடும் பதிலடி!

கனடாவின் எதிர்காலத்தைக் கனடியர்களே தீர்மானிப்பார்கள் என்றும், வெளிநாட்டு அரசாங்கங்களோ அல்லது தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களோ இதில் தலையிட முடியாது என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து கியூபெக் மாகாணம் பிரிந்து தனியாக இயங்க வேண்டும் என்று அமெரிக்கத் தொழில் அதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயலருமான எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

அண்மையில் எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்த எலான் மஸ்க், “கியூபெக் மாகாணம் கனடாவிலிருந்து பிரிய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

எங்கள் எதிர்காலத்தைக் கனடியர்களே தீர்மானிப்பார்கள்" – எலான் மஸ்கிற்கு கார்னி கடும் பதிலடி! | Canadas Future Will Be Decided By Canadians

கியூபெக்கில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சித் தலைவர் பால் செயிண்ட்-பியர் பிளாமண்டன், கியூபெக் ஒரு நாள் தனி நாடாகும் எனக் குறிப்பிட்டிருந்த பதிவுக்கு ஆதரவாக மஸ்க் இந்த பதிலை எழுதியிருந்தார்.

மேலும், ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் மாகாணங்களும் கனடாவிலிருந்து பிரிவதே அவற்றிற்கு நல்லது என்றும் மஸ்க் தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *