உலகம்

பிரித்தானியாவில் குளிரான வானிலை தொடர்பில் முன்னெச்சரிக்கை

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் இறுதியில் லேசான மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படவாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நாளைய தினத்தில் இருந்து குளிரான சூழல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் வெப்பநிலை 8°C ஆகவும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 10°C ஆகவும் குறையும். ஸ்காட்லாந்தின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் வரும் ஞாயிற்றுக்கிழமை வறண்ட வானிலை மற்றும் வெயில் இருப்பதால் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

முன்னெப்போதும் இல்லாத எல் நினோ நிகழ்வின் விளைவுகளால், ஈரமான மற்றும் புயல் நிறைந்த இலையுதிர் காலம் பனிக்காலமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *