இந்தியா

இடைத் தேர்தலிலும் தவெக வெற்றிநடை

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டிலும் தவெக வெற்றி பெற்றது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில், தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, தவெக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

மதுராந்தகத்தில் 27 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றது. திமுக இரண்டாவது இடமும் அதிமுக மூன்றாவது இடமும் பிடித்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *