இலங்கை

மகிந்த மாரடைப்பால் இறப்பதற்காக டயஸ்போராக்கள் வழங்கிய ஆலோசனை;  அர்ச்சுனா எம்.பி. கடும் சீற்றம்

மகிந்தவின் மனைவி ஷிராந்தியை உள்ளே போட்டதற்காக தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர் ஆனால் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன் .எமது புலம்பெயர்ந்தவர்களிடம் நீங்கள் வாங்கிய பணத்திற்காக அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுகின்றீர்கள். மகிந்த குடும்பம் தொடர்பில் பிரபாகரனால் செய்ய முடியாததை தற்போது நீங்கள் செய்கின்றீர்கள் என சுயேச்சைக் குழு 17 இந்த தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மேலும் பேசுகையில்,

ஊழல் மோசடிகள் சட்டத்தின் மூலம் பிரபாகரனாலும் செய்ய முடியாமல் போனதை நீங்கள் செய்து கொடுத்துள்ளீர்கள். மகிந்த ராஜபக்‌ஷவையும் அவரின் மனைவியையும் அவரின் மகனையும் சிறையில் அடைத்து எமது மக்களை உற்சாகப்படுத்துகின்றீர்கள் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.எமது புலம்பெயர்ந்தவர்களுக்கு நீங்கள் வாங்கிய பணத்திற்காக பெரும் மகிழ்ச்சியை கொடுகின்றீர்கள்.

இப்போது கோதாபய ராஜபக்‌ஷ மட்டுமே மிச்சமாக இருக்கின்றார். நாங்கள் மகிழச்சியடைவோம். இங்கு டபிள் கேம் நடக்கின்றது. டயஸ்போரா நீங்கள் செய்யும் வேலைகளுக்கு மகிழ்ச்சியடைகின்றது.

நீங்கள் அரசியலில் எதிரானவர்களை பிடித்து சிறையில் அடையுங்கள். டயஸ்போராக்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். மகிந்தவின் மனைவி ஷிராந்தியை உள்ளே போட்டதற்காக தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் அரசியலையே செய்கின்றீர்கள். மகிந்த ராஜபக்‌ஷ மாரடைப்பு ஏற்பட்டு இறக்க வேண்டுமாயின் அவரின் மனைவியை உள்ளே போடுங்கள்.

மகிந்த, மனைவி, கோதா, நாமல் ஆகியோரை உள்ளே போடுமாறு டயஸ்போரா கூறியது. பிரபாகரனால் செய்ய முடியாததை நீங்கள் செய்வதற்காக எமது மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர் எப்படியாவது மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அவர்களை உள்ளே போடுங்கள் அப்போது உங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *