இலங்கை

பௌத்த பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் சீர்குலைத்து காவி உடைக்கு அரசு தீ வைக்கக் கூடாது

பௌத்த பிக்குகளின் காவி உடை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்த பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் சீர்குலைக்கக்கூடும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஒரு பெரும்பான்மையான சிங்கள – பௌத்த பண்பு கொண்ட நாடு. நாட்டின் வரலாற்றிலும் சமூகத்திலும் பௌத்த விகாரைகளும் பிக்குகளும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.ஒவ்வொரு சிங்களக் கிராமத்திலும் விகாரைகளும் பௌத்த பிக்குகளும் உள்ளனர்; சில கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விகாரைகள் கூட உள்ளன. எனவே, இது நீண்ட வரலாற்றைக் கொண்ட, பௌத்த பிக்குகள் மற்றும் விகாரைகளை மையமாகக் கொண்ட சமூகத்தைக் கொண்ட ஒரு பௌத்த நாடு என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் இப்போது “காவி உடையைத் தொட்டுவிட்டது”. இனிமேலும் அதில் தலையிட வேண்டாம். அந்தக் காவி உடைக்குத் தீ வைக்கும் செயலில் அரசாங்கம் இறங்கக்கூடாது. நீங்கள் எங்கள் வரலாற்றையும் செழிப்பையும் நாகரிகத்தையும் சீர்குலைக்க முற்படுகிறீர்கள்.

பௌத்த மதகுருமார்கள் மற்றும் காவி உடையின் செல்வாக்கைச் சவால் செய்ய முற்பட்டபோது காலனித்துவ ஆட்சியாளர்கள் கூட எதிர்ப்பைச் சந்தித்தனர்.

இந்த உலகில் யாராலும் காவி உடையின் கண்ணியத்தைக் குறைக்கவோ அல்லது அதைச் சீர்குலைக்கவோ முடியாது. காவி உடைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட அரசாங்கத்தைக் கேட்டுடுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *