சிறையில் ஷிரந்திக்கு மாரடைப்பு வரலாம்; மயங்கி விழவும் கூடும் – சட்டத்தரணி சுட்டிக்காட்டு!

சிரியிலிய வழக்கு தொடர்பாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ , திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிடுகிறார். அது எந்த நேரத்தில் நடக்கும் என்று கூற முடியாது” என அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் த சில்வா நேற்று நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபருக்கு பிணை கோரிக்கை விடுத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து இதற்கான காரணங்களைச் சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில்,
“எனது கட்சிக்காரருக்கு 73 வயதாகிறது. அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டு முதல் இதய நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகிறார்.இவ்வாறான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சிறையில் அடைத்தால், அவர் மன அழுத்தத்தினால் உயிரிழக்கக் கூடும்.ஏனெனில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
அதேபோல், 2021 ஆம் ஆண்டு மூளை ஊடறிதல் (Brain scan) ஒன்று செய்யப்பட்டுள்ளது.திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிடுகிறார். அது எந்த நேரத்தில் நடக்கும் என்று கூற முடியாது.
அவரது முதுகெலும்புத் தொடரிலும் ஒரு குறைபாடு உள்ளது. அவருக்கு வேரிகோஸ் (Varicose) நோய் நிலைமையும் உள்ளது.அதனால் அவரால் தனது சொந்தக் காரியங்களைத் தனியாகச் செய்ய முடியாது. இப்படியான ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் சிகிச்சை அளிக்க முடியாது.
அவர் தனது நோய் நிலைமைக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் ஒருவராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும் நீதிபதி,அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
![]()