இலங்கை

மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச நிபுணர்களின் உதவிகள் பெறப்படும்

செம்மணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் தேவையான கட்டத்தில் சர்வதேச நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராசாாணிக்கம் சாணக்கியனால் நிலையியல் கட்டளை 22/7இன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழி மட்டுமன்றி ஏனைய மனித புதைகுழிகள் தொடர்பிலும் அகழ்வு பணிகள் நடக்கின்றன. நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே அந்தப் பணிகள் இடம்பெறுகின்றன. அந்த விடயத்தில் சர்வதேச விசேட நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளோம். ஐநா அல்லது ஐசீசீஆர் ஆகியவற்றின் ஆய்வாளர்களின் அலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எவ்வாறாயினும் செம்மணியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் தேவையேற்படும் போது, டீஎன்ஏ தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் காலங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும் விசேட நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *