இலங்கை

தமாம் சிறைச்சாலைக்குச் சென்று; அனோஜனைப் பார்வையிட்ட இலங்கைத் தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜாவை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் நேற்று பார்வையிட்டுள்ளார்.

தமாம் சிறைச்சாலைக்கு சென்ற தூதுவர் உள்ளிட குழுவினர் அனோஜனை பார்வையிட்டு அவரின் உடல்நலம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அனோஜன் சிவராஜா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில் இருந்த இன்னுமொரு கைதியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஏற்பட்ட மோதல் நிலைமையால் அனோஜனுக்கு நகக் கீரல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை அனோஜன் சிவராஜா விடயத்தில் எதிர்வரும் நாட்களில் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு செய்யப்படவுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *