இலங்கை

75 மில்.ரூபாவுக்கும் அதிகமான சொத்து சேர்ப்பு; விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு சாட்சிய விசாரணைக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததாகக் கூறி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் அடுத்தகட்ட சாட்சிய விசாரணைக்காக முறைப்பாட்டுத் தரப்பின் 31, 32 மற்றும் 33ஆம் இலக்க சாட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வழக்குடன் தொடர்புடைய மூன்று சாட்சிகள் நேற்று (08) நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

வழக்கின் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் நேற்று திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *