உலகம்

உளவு பார்த்த இளம் பிரித்தானிய கடற்படை வீரர்: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானிய கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை வீரர் கைது
தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரித்தானிய கடற்படை வீரர் ஒருவர் லண்டன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயது டெடி யங்(Teddy Young) என்ற கடற்படை வீரர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

அரசின் முக்கிய ரகசியங்களை கசியவிடும் நோக்கில் முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மீது சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன் வெளிநாட்டுக்கு உதவும் நோக்கில் அரசின் முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட தகவல்களை சேகரித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் RAF பேர்போர்டு விமானப் படை தளத்தில் சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்திற்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று காவல்துறையினர் தெளிப்படுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *