உலகம்
இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை ; ட்ரம்ப்

எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னர் எந்த நேரத்திலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது ‘ட்ருத் சோஷியல்’ சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமான முறையில் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
![]()