பாராளுமன்றத்தில் புலிகள் பற்றி பேசினால் இனிமேல் விடமாட்டேன்

பாராளுமன்றத்தில் இனவாதமாகவும் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பிலும் எவராவது பேசினால் இனிமேல் நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் என்று யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தனது யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றிலேயே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்கியுள்ளேன். இனிமேல் நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். இனவாதங்களை பேசுவதனையும், விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசுவதனையும் இனி எதற்கு பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.
நான் பாராளுமன்றத்திற்கு வந்தபோது எனது இனத்தின் மனதில் உள்ளதை கதைத்தேன். ஆனால் பின்னர் விளங்கிக்கொண்டேன். அங்கு அந்த சனம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றது. நாங்கள் இங்கு இனவாதம் பேசுகின்றோமே என்று நினைத்தேன். இப்படி என்னை துரோகி என்றாலும் சிங்களவர்களுடன் கதைத்து அவர்களை எமது பக்கத்திற்கு இழுத்து வருவேன்.
இப்போது எனக்கு எல்லோருடனும் தொடர்புள்ளது. நான் சிங்களவர்களை இனவாதியாக பார்க்க விரும்பவில்லை. தமிழர்களை சிங்களவர்களிடம் அடிவாங்குவதை பார்க்கவும் விரும்பவில்லை. வடக்கு மாகாணத்தில் இருந்து எமது இனத்திற்கு நல்ல அரசியலை செய்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
![]()