பலதும் பத்தும்

உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு சூரிய சக்தி மின்சார வசதி

ஐஸ்லாந்தின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள, மனித நடமாட்டமில்லாத எட்லிடே (Elliðaey) தீவில் உள்ள உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த சுயசார்பு சக்தி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த பழைய டீசல் மின்பிறப்பாக்கி (Generator) அகற்றப்பட்டு, புதிய சூரிய படலம் (Solar Panel) நிறுவப்பட்டுள்ளது.

 

உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு சூரிய சக்தி மின்சார வசதி | Solar Power Facility World S Most Isolated House

இந்தத் தீவில் ஒரேயொரு வீடு மட்டுமே காணப்படுவதுடன், அதனைச் சுற்றி வேறு எந்த மனித குடியிருப்புகளும் இல்லை.

1950 ஆம் ஆண்டு இந்த தீவிற்கு ‘பஃபின்’ (Puffin) ரக பறவைகளை வேட்டையாட வந்த வேட்டைக்காரர்கள் சங்கத்தினரால் இவ்வீடு அமைக்கப்பட்டது.

மின்சாரமோ அல்லது இணைய வசதியோ இல்லாத இந்தத்தீவு, அமைந்துள்ள தனித்துவமான விதம் காரணமாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *