பலதும் பத்தும்

இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் மூன்று பேர் உயிரிழக்கின்றனர்

இலங்கையில் மார்பகப் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு மூன்று பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல இதனைத் தெரிவித்தார்.

இலங்கைப் பெண்களிடையே மிகவும் அதிகமாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் விளங்குகின்றது.

நாட்டில் ஆண்டொன்றுக்கு 6,000க்கும் அதிகமான புதிய நோயாளர்கள் இனங்காணப்படுவதுடன், 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

இதனைச் சுருக்கமாகக் கூறினால், ஒவ்வொரு நாளும் புதிதாக 17 நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் 3 பேர் உயிரிழக்கின்றனர்.

தெளிவான அறிகுறிகள் தென்பட்டபோதிலும் பெரும்பாலான நோயாளர்கள் மிகவும் தாமதித்தே மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர் என்றும், இதனால் சிகிச்சைகள் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறுவது கடினமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிதல், முறையான சிகிச்சைகளைப் பெறுதல், தொடர் கண்காணிப்பு மற்றும் நோயாளர்களைச் சரியாகப் பராமரித்தல் என்பன மிக அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *