உலகம்

எரிபொருள் விலை உயர்வுக்கு உக்ரைனே முக்கிய காரணம் ; டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரானுடனான போர் காரணமல்ல என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றத்திற்கான இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளையும் பிற நாடுகளையும் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

 

எரிபொருள் விலை உயர்வுக்கு உக்ரைனே முக்கிய காரணம் ; டிரம்ப் குற்றச்சாட்டு | Ukraine Main Reason For The Rise Fuel Prices Trump

இந்த நிலையில், அமெரிக்காவில் தற்போது நிலவும் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள டிரம்ப், ஈரானுடனான அமெரிக்காவின் போர் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகம் தற்போது சீரடைந்து வருவதாகவும், நாளாந்தம் பெருமளவிலான கச்சா எண்ணெய் அந்த வழியாக கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த தடை சீராகி வருவதாகவும், எனவே ஈரானுடனான போர் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணமாக இருக்க முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மாறாக, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் தாக்குதல்களே எரிபொருள் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் நிலைமைகளும் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்யும் மாகாணங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *