2029ஆம் ஆண்டுக்கு முன் அரசியல் மாற்றம் வரும்; பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் நம்பிக்கை

2029ஆம் ஆண்டுக்கு முன்னர் தீர்மானமிக்க அரசியல் மாற்றமொன்று ஏற்படலாம் என்றும், அதனை நோக்கியே நாமல் ராஜபக்ஷவின் பயணம் இருக்கின்றது என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ஷ எங்கு இருந்தாலும் கட்சியின் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. நாமல் ராஜபக்ஷவின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாங்கள் 2029 அல்லது அதற்கு முன்னர் ஏதேனும் மாற்றம் நடக்கலாம். அரசாங்கத்தின் போக்குகளை பார்க்கும் போது ஏதோவொரு தீர்மானமிக்க அரசியல் மாற்றமொன்று ஏற்படலாம். அந்த நிலைப்பாட்டிலேயே நாமல் ராஜபக்ஷவும் இருக்கின்றார். இந்த நேரத்தில் நாங்கள் எந்த சவாலுக்கும் முகம்கொடுக்க தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
![]()