நேசம் நாடும் நெஞ்சங்கள்

வசதி குறைந்த ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு

அவுஸ்ரேலியாவை தளமாகக்க கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் வசதி குறைந்த ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில்   (04.10.2026) பி.ப 3.00 மணிக்கு அமைப்பின் பாண்டிருப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ்வாண்டுக்குரிய முதல் ஆறுமாதங்களுக்கான நிதி உதவி கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட நிலையில் இதன் தொடராக மூன்றாம் காலாண்டின் ஜூலை,ஓகஸ்ட்,செப்ரெம்பர் ஆகிய மாதங்களுக்கான நிதி உதவியாக, சமூகமளித்த மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா பன்னீராயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைப்பின் பொருளாளர் திரு வி. நகுலேஸ்வரன் செயற்குழு உறுப்பினர் க.யனார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நிதி உதவியை வழங்கி வைத்தனர்.

எமது பிரதேசத்தில் வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கி வரும் அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கும் அதன் நிருவாகிகளுக்கும் நிதிக் கொடை நல்கும் அன்பர்களுக்கும் எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

ந.கமலநாதன்
தலைவர்
மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகம்.
பாண்டிருப்பு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *