உலகம்

அவுஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி நகரமான நியூகாஸிலில் ரக்பி லீக் ஆதரவாளர்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 18 வயதான இளைஞரைக் கைது செய்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 5 வயதுச் சிறுமி மற்றும் 67 வயது முதியவர் ஆகிய இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய 8 பேர் சீரான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுப்பாடு இழப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னர் உள்ளூர் ரக்பி அணியான ‘நியூகாஸில் நைட்ஸ்’ வீரர்களை வழியனுப்புவதற்காக மக்கள் திரண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம் | Car Hits Rugby Supporters Australia 10 Injured

அத்துடன் இந்த விபத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாகனத்தைச் செலுத்திய இளைஞரும் குறித்த ரக்பி அணியின் ஆதரவாளர் எனவும், உற்சாக மிகுதியால் காரை வேகமாகச் செலுத்திய போது கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் மோதியதாகவும் நியூகாஸில் மேயர் கெவின் மொரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *