பலதும் பத்தும்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா; உலகிற்கு எச்சரிக்கை

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா மேலும்

மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

ஏவுகணை சோதனை இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் துறைமுக நகரமான வின்சன் நகரில் இருந்து 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.முக நகரமான வின்சன் நகரில் இருந்து 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்தில் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தென் கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தன.

இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து தென் கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. அதேவேளை, வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையில் நிலவி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *