பலதும் பத்தும்

வீட்டு வேலை செய்யும் அதிநவீன ரோபோக்கள் அறிமுகம்

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் ‘டாவ் ரோபோடிக்ஸ்’ (Tau Robotics) நிறுவனம், வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

4.4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோக்கள், படிக்கட்டுகள், கார்பெட்கள் மற்றும் தரைகளில் எளிதாக நடந்து சென்று வேலை செய்கின்றன. ஸ்ப்ரே பாட்டில்கள் மற்றும் வேக்கம் கிளீனர்களை பயன்படுத்தி தரையை துடைப்பது, பாத்திரங்களை கழுவுவது, கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் படுக்கையை சரிசெய்வது என மனிதர்கள் செய்யும் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து அசத்துகின்றன.

ரோபோக்கள் தங்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் திறன் சிறப்பாக இருப்பதாக பயனாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், மனிதர்களின் நுணுக்கமான துப்புரவுப் பணிகளுக்கு ரோபோக்கள் முற்றிலும் மாற்றாக முடியாது என்றும், பெரிய வணிக நிறுவனங்களுக்கு இவை உதவக்கூடும் என்றும் துப்புரவுத் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *