உலகம்
தாய்லாந்து விமான நிலையத்தில் குவிந்த பயண பொதிகள்! பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி

தாய்லாந்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தாய் ஏயார்வேஸ் (Thai Airways) விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விமான சேவைகாள் நிறுத்தப்பட்டதால் , பயணிகளின் பல்லாயிரக்கணக்கான பயணப் பொதிகளும் லக்கேஜ்களும் பேங்கொக் விமான நிலையத்தில் எங்கு பார்த்தாலும் தேங்கிக் கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்தச் சூழலை விரைவாகச் சீர்செய்வதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகச் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
![]()