உலகம்

பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ; சதியை முறியடித்தவருக்கு இஸ்ரேல் பாராட்டு

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. அப்போது விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையில் விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால சமிஞ்சைகள் இஸ்ரேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்குவாக் 7700 (பொது அவசரநிலை) எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ; சதியை முறியடித்தவருக்கு இஸ்ரேல் பாராட்டு | Indian Pilot Saves Passengers From Terrorist

இதற்கிடையில் விமானம் வழக்கத்திற்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது, ஸ்குவாக் 7500 (விமான கடத்தல்) என்ற எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இஸ்ரேலிய வான்வெளியும் சிறிது நேரத்தில் மூடப்பட்டது.

இதன் காரணமாக பயனிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் செய்து சவுதி அரேபியா நோக்கி திரும்பியது. பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இஸ்ரேல் வேறு விமானத்தை அனுப்பியது. இந்த நிகழ்வு குறித்து விமானத்தில் பயணம் செய்த மிரியம் என்ற பயணி கூறுகையில், விமானியின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, விமானத்தின் கதவை ஊழியர்கள் திறந்த போது, விமானிகளில் ஒருவர் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்ததை தான் பார்த்ததாக கூறினார்.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற பயணிகள் விமானத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியும், ஓமன் நாட்டை சேர்ந்த ஒரு துணை விமானியும் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான கடத்தல் சம்பவத்தில் ஓமன் நாட்டு துணை விமானியுடன், இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிள்ளார்.

அப்போது அவர் பயணிகளின் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் விமானியுடன் போராடிய போது, இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து சவுதியில் விமானம் தரையிரங்கிய போது, ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் கூறுகையில், இஸ்ரேல் நோக்கி சென்ற ப்ளைதுபாய் விமானத்தை திசை திருப்பி, பயணிகளை பாதுகாக்க சிங்கத்தை போல போராடிய ஒரு வீரமிக்க விமானி என கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டியுள்ளார்.

மேலும் அவர், துபாயில் இருந்து வந்த விமானத்தில் இஸ்ரேலிய பயணிகளை, பேரழிவில் இருந்து தடுக்கும் வகையில், சமயோசித புத்தியையும், அசாதாரணமான மன உறுதியையும் இந்திய விமானி வெளிப்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *