உலகம்

ரஷ்யாவில் குண்டு வீச்சு விமானம் தரையில் விழுந்து விபத்து ; 6 வீரர்கள் பலி

ரஷ்யாவில் அணு ஆயுத வல்லமை பெற்ற குண்டு வீச்சு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் அமூர் மாகாணம் சீன எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று ரஷ்ய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அப்போது, ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான டியூ-95 என்ற அணு ஆயுத வல்லமை பெற்ற குண்டு வீச்சு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரே ஒரு வீரர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதையடுத்து, அந்த வீரர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

குண்டு வீச்சு போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *