பலதும் பத்தும்

இனி வாழைப்பழத் தோலை குப்பையில் போடாதீர்கள்.., இவ்வளவு சத்துக்கள் இருக்கா?

பொதுவாக வாழைப்பழங்களில் மட்டுமல்லாமல் வாழைப்பழத்தோலிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

வாழைப்பழத்தோலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, பொட்டாசியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் டிரிப்டோபான் போன்ற சத்துக்கள் உள்ளன.

மேலும், வாழைப்பழத்தோலில் லூட்டின் மற்றும் கரோட்டினாய்டுகளும் காணப்படுகின்றன.

வாழைப்பழத்தோலில் உள்ள லூட்டின் ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்பட்டு கண்களை ஆக்ஸிடேட்டிவ் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.

இனி வாழைப்பழத் தோலை குப்பையில் போடாதீர்கள்.., இவ்வளவு சத்துக்கள் இருக்கா? | Health Benefits Of Banana Skin In Tamil

டிரிப்டோபான், உடலில் செரோட்டோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் மனநிலையை சீராக வைத்திருக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.

வாழைப்பழத்தோலில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். இது குடலில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளுக்கு உணவாக செயல்படுகிறது.

வாழைப்பழத் தோலை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. எனவே, தோலை சிறு துண்டுகளாக நறுக்கி ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடலாம்.

இனி வாழைப்பழத் தோலை குப்பையில் போடாதீர்கள்.., இவ்வளவு சத்துக்கள் இருக்கா? | Health Benefits Of Banana Skin In Tamil

பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இருக்க வாய்ப்புள்ளதால், தோலை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.

மேலும், வாழைப்பழத் தோலை சுமார் 10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீராகவும் குடிக்கலாம்.

தோலை சிறு துண்டுகளாக நறுக்கி பொரியல் , பேக் அல்லது வதக்கியும் சாப்பிடலாம்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு சாப்பிடுவது பாதுகாப்பானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *