பலதும் பத்தும்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இப்படியொரு சாதனமா?

பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் நோக்கில் தென்னாப்பிரிக்க மருத்துவர் சோனெட் எஹ்லர்ஸ் உருவாக்கிய ‘ரேப்-ஆக்ஸ்’ (Rape-aXe) என்ற பாதுகாப்பு சாதனம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வேகமாகப் பரவி வருகின்றன.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சாதனம், பாலியல் வன்கொடுமையை மேற்கொள்ள முயற்சிக்கும் நபரைத் தடுக்கவும், பின்னர் அவரை அடையாளம் காண உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாக அதன் உருவாக்குநர் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

சாதனத்தின் உட்பகுதியில் உள்ள சிறிய கொக்கிகள், பாலியல் வன்கொடுமை முயற்சியின் போது குற்றவாளியின் ஆணுறுப்பில் பற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அதை மருத்துவரின் உதவியின்றி அகற்ற முடியாது என்றும், இதன் மூலம் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை பொலிஸார் அடையாளம் காணும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Rape-aXe new condoms

இதனிடையே, பழையதாக இருந்தாலும் அதிர்ச்சியூட்டும் வடிவமைப்பைக் கொண்ட இந்தப் பாதுகாப்பு சாதனம் தொடர்பான படங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், ‘Rape-aXe’ என்ற பெயர் மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *