இந்தியா

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நாவில் இந்தியா கண்டனம்

வளைகுடா, செங்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது அமர்வின் இடையே, கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பான ‘நண்பர்கள் குழு’ (Group of Friends) அமைப்பின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளை வழங்கும் முக்கிய நாடான இந்தியாவும், மிகப்பெரிய அளவில் கப்பல் பதிவுகளைக் கொண்ட லைபீரியாவும் இணைந்து, கடல்சார் வர்த்தகம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உலகிற்கு வலியுறுத்த முன்வந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக வளைகுடா, செங்கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் மற்றும் அப்பாவி உயிர்களைப் பறிக்கும் இத்தகைய செயல்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை” எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கண்டித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *