நிகழ்வுகள்
சிறப்பாக நடைபெற்ற வல்லிபுரம் ஆழ்வார் தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – வடமராட்சி துன்னாலை ஶ்ரீ வல்லிபுராழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத் திருவிழாவின் 15ம் நாள் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக இடம்பெற்றது.
காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகி ஶ்ரீ வல்லிபுரத்தாழ்வார் சக்கரம் தேரேறினார். பிள்ளையார், முருகப்பெருமான், சக்கரத்தாழ்வார் என முத்தேர் பவனி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

![]()