உலகம்

கொங்கோவில் விமானம் விபத்து ; பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல்

ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9S-GUC என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட குறித்த விமானத்தில் 12 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாக Régie des Voies Aériennes (RVA) நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கின்ஷாசா-என்டோலோவில் இருந்து கிக்விட் மற்றும் இலேபோ நோக்கி உள்ளூர் விமான சேவையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

விபத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிய அதிகாரப்பூர்வ விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் ஆரம்பக்கட்டமானவை என்பதால், மேலதிக உறுதிப்படுத்தல்கள் கிடைக்கும் வரை இந்த விவரங்கள் உறுதியற்றதாகவே கருதப்படுகின்றன…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *