உலகம்

ஆஸ்திரேலியாவின் இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம்

  • வேலையின்மை வீதம் அதிகரிப்பு: ஆஸ்திரேலியாவில் சமீபத்திய பொருளாதார மாற்றங்களால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிந்தைய காலக் கட்டத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • விளையாட்டு – கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 298 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜின் (4 விக்கெட்டுகள்) பந்துவீச்சில் சிக்கி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  • பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு பகுதிகள் (IPA): ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வகுடி மக்களால் பாதுகாக்கப்பட்டு வரும் இயற்கை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகள் குறித்து கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

  • தமிழர் சாதனை:NSW Hall of Champions அமைப்பில் ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக் வீரர் பிரசாந்த் செல்லத்துரை சேர்க்கப்பட்டுள்ளார்; ஆஸ்திரேலியாவில் இத்தகைய உயரிய கௌரவத்தைப் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *