முச்சந்தி

திலீபன் நினைவு நிகழ்வில் ஒலிபெருக்கி பறிமுதல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு நடாத்துவதற்கான ஒலிபெருக்கி அனுமதி பொலீசாரால் வழங்கப்படாமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவிடத்தில் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் அங்கு சென்ற பொலிஸார் ஒலிபரப்பும் சாதனங்களை பாவிக்க அனுமதி இல்லை எனக் கூறி அங்கிருந்த ஒலியமைப்பு பொருட்களை எடுத்து சென்றனர்.

இதனை மீள வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிய போதும் ஒலியமைப்பு சாதனங்களை வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் அக்கட்சியின் உறுப்பினரும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினருமான பொன்மாஸ்டர் யாழிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *