பலதும் பத்தும்

இளையராஜாவுக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்த அவுஸ்திரேலியா

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைத்துறைக்கான 50 ஆண்டுகால பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவுஸ்திரேலியா அவரை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிட்டுள்ளது.

திரைப்படப் பாடல்கள், பின்னணி இசை, ஆன்மீகப் பாடல்கள், இசைக்கச்சேரிகள் மற்றும் சிம்பொனி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளையராஜா தனது இசைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு கௌரவம், அவரது சர்வதேச இசைப் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் இளையராஜா கலந்துகொண்டு, தனக்காக தபால் தலை வெளியிட்டமைக்காக அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இளையராஜாவுக்கு கிடைத்துள்ள இந்த கௌரவத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *