உலகம்

ஐ.நா.வில் நெதன்யாகு உரையாற்றும் போது பிரதிநிதிகள் வெளிநடப்பு!

ஐ.நா.வில் இஸ்ரேல் நடவடிக்கைகளை வலுவாக பாதுகாத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச தொடங்கிய போது பல பிரதிநிகள் வெளியேறினர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேடைக்கு வந்தபோது, ​​அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பொது சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், அவர்களை “தார்மீகக் கோழைகள்” என்று வர்ணித்தார். பார்வையாளர் மாடத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் எபிரேய மொழியில், “இஸ்ரேல் மக்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.

“நான் இங்கு வருவதை நீங்கள் தடுக்க முயன்றீர்கள். என்னை அமைதியாக்க முயன்றீர்கள். சரி, உங்களால் என்னை அமைதியாக்க முடியாது. உண்மையை உங்களால் அமைதியாக்க முடியாது,” என்று மம்தானியை பற்றி நெதன்யாகு கூறினார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கு நெதன்யாகு வருகை தந்தால், அவர் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக அவரை கைது செய்ய வைப்பேன் என்ற வாக்குறுதியுடன் மம்தானி பதவிக்கு பிரசாரம் செய்தார்.

ஆனால், அவ்வாறு செய்வதற்கு தனக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று பின்னர் அவர் கூறினார். இந்த வாரம், மம்தானி, நெதன்யாகுவை “பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஒரு கொடூரமான இனப்படுகொலையின் சூத்திரதாரி” என்று வர்ணித்தார்.

ஜனவரியில் மம்தானி பதவியேற்ற பிறகு நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட நெதன்யாகு, “இதோ ஒரு எளிய உண்மை, இஸ்ரேல் இனப்படுகொலையை செய்யவில்லை. இஸ்ரேல் இனப்படுகொலையைத் தடுத்தது,” என்று கூறினார்.

“என் நாட்டைப் பற்றியும் நமது வீரமிக்க படைவீரர்களைப் பற்றியும் இந்தப் பொய்களைப் பரப்புபவர்கள், அவர்கள் இந்த அரங்கில் அமர்ந்திருந்தாலும் சரி, நியூயார்க்கின் யூத – விரோத மேயரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும் நான் இதைச் சொல்கிறேன், உங்களுக்கு வெட்கமாக இல்லையா!” என்று நெதன்யாகு கூறினார்.

“பிரதமர் நெதன்யாகு, தான் மீண்டும் மீண்டும் செய்து வருவதை போலவே, பாலஸ்தீனியர்கள் மீதான தனது இனப்படுகொலையை மூடிமறைக்கும் நோக்கில் ஆதாரமற்ற பொய்களை தனது உரையில் மீண்டும் மீண்டும் கூறினார்.

ஆயினும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்டிற்கு அவர் இன்னும் உட்பட்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த பொய்யாலும் மாற்றிவிட முடியாது,” என மம்தானி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *