உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கி தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு(UKMTO) தெரிவித்துள்ளது.

அதன்படி, அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கியதில், அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்ததுடன், கட்டுப்பாடின்றி கடலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இருவர் உயிரிழப்பு

 

சம்பவத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்றும் UKMTO கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால் அவற்றை UKMTO-விடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *