உலகம்

ஐ.நா. சபையில் ஸெலென்ஸ்கி உரையாற்றவிருந்த சில மணி நேரத்திற்க்கு முன்னால் நடந்த சம்பவம் ; பறிபோன உயிர்கள்

ஐ.நா. சபையில் ஸெலென்ஸ்கி உரையாற்றவிருந்த சில மணி நேரத்திற்க்கு முன்னால் நடந்த சம்பவம் ; பறிபோன உயிர்கள்

ஐ.நா. சபையில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை உரையாற்றவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக, அந்நாட்டுத் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

ரஷ்யாவுக்கு எதிரான நான்கரை ஆண்டுகால போரில் கூடுதல் சா்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கில், ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தற்போது அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ளாா்.

அவா் ஐ.நா. சபையில் உரையாற்றுவதுடன், நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ருட்டே மற்றும் ஐரோப்பிய தலைவா்கள் ஆகியோரையும் சந்தித்து வருகிறாா். இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 23 போ் காயமடைந்தனா்.

தொடா் தாக்குதல்களால் கீவ் நகரின் வான்பரப்பில் கரும்புகை சூழ்ந்ததோடு, பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்து தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென்கிழக்கு உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவா் காயமடைந்தனா். அங்கு ஏற்பட்ட தீ சுமாா் 6 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரவிய பின்னா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனிடையே, உக்ரைனின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மையங்களைத் தாக்கியதாகவும், பல்வேறு பகுதிகளில் ஊடுருவிய 500-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்து, அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *