இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; எந்தக் குற்றவாளியும் தப்பிக்கவே முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் தப்பமுடியாது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பு அரசாங்கத் தகவல் திணைக்க கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினமும்(திங்கள்)சுரேஷ் சலேக்கு எதிரான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தேசிய மருத்துவமனையின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நேரடியாக தொடர்புடைய, ஆதரவளித்த, தூண்டுதல் அளித்த அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *