சவூதி அரேபியா கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தது

சவூதி அரேபியா தனது கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழியிலான (East-West Pipeline) செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதுடன், செங்கடல் துறைமுகமான யான்புவிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 13 அன்று இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த குழாய் வழியூடான செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் யான்பு துறைமுகத்திலிருந்தான எண்ணெய் ஏற்றுமதியும் தடைப்பட்டிருந்தது.
சீனாவுக்கான ஏற்றுமதிப் படகு
தற்போது விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியூடான எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்ட நிலையில், சவூதி அரேபியா உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் 4 சதவீதமான சுமார் 4 மில்லியன் பீப்பாய்களை நாளாந்தம் இந்த குழாய் வழியினூடாகவே மாற்று வழியில் கொண்டு சென்றது.
தற்போது குறைந்த அளவிலேயே எண்ணெய் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்திற்கு சொந்தமான சவூதி அராம்கோ நிறுவனம் அதன் அளவை நாளொன்றுக்கு 4 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்த முயற்சித்து வருகிறது.
இந்நிலையில செங்கடல் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மசகு எண்ணெய் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதுடன், சீனாவுக்கான ஏற்றுமதிப் படகொன்றும் தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![]()