இலங்கை கணக்கிலேயே பதிவிட்டேன் சவூதியால் தண்டனை வழங்க முடியாது; இலங்கையிலேயே வழக்கு தொடர வேண்டும் என்கிறார் அனோஜன்

இலங்கையில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்கின் பதிவொன்றுக்கே நான் பதில் கருத்திட்டேன். எனது பேஸ்புக் கணக்கு, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முகவரி என்பன இலங்கையுடன் தொடர்புடையதே. இவ்வாறிருக்கையில் சவூதி அரசாங்கம் எனக்குத் தண்டனை வழங்க எந்தக் காரணமும் இல்லை. இதனால் சவூதி அரசாங்கத்துடன் பேசி இலங்கை அரசாங்கம் என்னை நாட்டுக்கு(இலங்கை)அழைத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து என்ன தண்டனை வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன் என்று சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக் கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தெரி வித்துள்ளார்.
அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட் கிழமை கொழும்பில் எதிர்க்கட்சித் தலை வர் சஜித் பிரேமதாசவை சந்தித்த போது, அனோஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசியில் உரையாடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்தத் தொலைபேசி உரையாடலில் பேசப்பட்டவை வருமாறு,
சஜித் பிரேமதாச: அனோஜன் இப்போது உங்களது நிலைமை எவ்வாறு இருக்கின் உறது?
அனோஜன்: எனது வழக்குடன் தொடர் புடைய அனைத்தும் இலங்கையிலுள்ள கணக்குடன் தொடர்புடையது. அந்த கணக் கில்தான் நான் கருத்துப் பதிவிட்டேன். இதன்படி எல்லாமே இலங்கையுடன் தொடர்புடைய கணக்கில்தான் செய்யப் பட்டது. இது இலங்கையில் இருந்து போடப்பட்ட கருத்தாகவே அமையும். நான் சவூதி பிரஜையும் அல்ல. சவூதியின் பேஸ்புக் கணக்கும் அல்ல. இதனால் சவூதி அரசாங்கம் எனக்குத் தண்டனை வழங்க எந்தக் காரணமும் இல்லை. எனது வழக்கின் தொலை பேசி எண், முகவரி, இருப்பிடம் எல்லாமே இலங்கையாகதான்
இருக்கின்றது. இந்நிலையில் சவூதி அர சாங்கம் எவ்வாறு சவூதி நீதிமன்றத்தில் நட வடிக்கை எடுக்க முடியும்? எனவே, சவூதி அரசாங்கத்துடன் பேசி எமது அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். எமது அர சாங்கம் எனக்கு என்ன தண்டனை வழங் கினாலும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன்.
சஜித் பிரேமதாச: நீங்கள் அந்தக் கருத்தை இலங்கைப்(பேச புக்) பக்கத்திலாபதிவிட்
டீர்கள்?
அனோஜன்: ஆம், இலங்கை பேஸ்புக்
பக்கத்திலேயே பதிவிட்டேன். ஒரு நபர் பதிவிட்ட பதிவிற்கு நான் பதில் கருத்துப் பதிவிட்டேன்.
சஜித் பிரேமதாச: அப்படியென்றால் இலங்கையிலிருந்து உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு நீங்கள் கருத்துப் பதிவிட்டீர்கள்,
அப்படித்தானே?
அனோஜன்: ஆம், அந்தப் பதிவுக்குத் தான் கருத்துப் பதிவிட்டேன்.
சஜித் பிரேமதாச: இப்போது உங்களது அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் மற்றும் ஊரைச் சேர்ந்த பலர் எனது அலுவ லகத்திற்கு வந்துள்ளனர். நான் இப்போது சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூத ரக அதிகாரி அஜ்வாத்திடம் பேசினேன். அவர்கள் என்னிடம், உங்களது விடுதலைக் காகவும், மன்னிப்புக்காகவும் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகக் கூறினர். நானும் எனது தரப்பிலிருந்து அதிகபட்ச முயற்சிகளைச் செய்கிறேன், சரியா? வேறு ஏதேனும் செ ல்ல விரும்புகிறீர்களா?
அனோஜன்: ஆம், இப்போது எனது வழக்கு அடுத்த கட்டமாக மேல்நீதிமன் றத்திற்குச் செல்லும் நிலையில் உள்ளது. அங்கு செல்லும் போது எனது தண்ட னையை குறைப்பதாக இருந்தால் உதாரண மாக 25 ஆண்டுகளிலிருந்து சில ஆண்டுகள் குறைத்து சவூதி சிறையில் அடைப்பார்கள் என்றால், அதுதான் அவர்களின் திட்டமாக இருக்கும். ஆனால் எனது குற்றம் இலங் கையுடன் தொடர்புடையது. இதனால். இலங்கைக்கு என்னை அழைத்து ஏதேனும் தண்டனை தருவதாக இருந்தால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் இலங் கைக்கு வந்தால் எனது அம்மா, அப்பா வைப் பார்க்க முடியும்.
சஜித் பிரேமதாச: சரி, நான் இலங்கை யில் உள்ள சவூதி தூதரக அதிகாரிகளுடன் மீண்டும் பேச முயற்சிக்கிறேன். உங்களது குடும்பத்தினர் கடிதம் ஒன்றைக் வழங்கிச் செல்கின்றார்கள். நான் வெளி விவகார அமைச்சிடமும் பேசி, அவர்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். வெளி விவகார அமைச்சின் செயலாள ரிடமும் பேசுகிறேன், சரிதானே?
அனோஜன்: ஆம்.
![]()