இலங்கை

மரண தண்டனையை உறுதிப்படுத்தி கடிதம்!; சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கையளிப்பு

அனோஜனின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் நேற்று(21) சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்திற்கு கிடைத்துள்ளதாக சவுதிக்கான இலங்கைத் தூதுவர் தொலைபேசி ஊடாக இன்று(நேற்று) தங்களிடம் உறுதிப்படுத்தினார் என்றும் அதற்கு முன்னதாக அனோஜனும் தங்களுடன் தொலைபேசியில் உரையாடி அதனை உறுதிப்படுத்தியிருந்ததாக அம்பாறையை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளரான தாமோதரம் பிரதீப் தெரிவித்தார்.

அத்துடன், அனோஜனை மீட்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம்(நேற்று) அனோஜனின் பெற்றோர், தம்பி, குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நாங்களும் காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் கலந்துரையாடினோம்.

அதன் பின்னர், அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சரையும் ஜனாதிபதியையும் நேரில் சந்தித்துப் பேசினோம். இதன்போது, அனோஜனின் விடுதலை தொடர்பில் விரைவான மற்றும் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

மேலும், பாராளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி இது குறித்துக் கலந்துரையாடி, விஷேட குழுவொன்றை அமைத்து அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, சவுதி தூதரகத்தில் கருணை மனுவைக் கையளிப்பதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், அங்கு உரிய அதிகாரிகள் சமுகமளித்திருக்காததால் அதனை கையளிக்க முடியாமல் போனது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *