இலங்கை

சவூதி அரசிடம் மகனுக்கு உயிர் பிச்சை கேட்கிறேன்; தூதரகத்திற்கு முன்னால் அனோஜனின் தாயார் அழுகை

எனது மகனின் தவறுகளை மன்னித்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையில் இருந்து அவரை மீட்டுத் தருமாறு சவூதி அரேபிய தூதரகத்திடம் பிச்சைக் கேட்பதாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தாயார் இராசமாணிக்கம் யோகலட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது மகனின் விடுதலை தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்திற்கு சென்றிருந்த போது, தூதரகத்திற்கு முன்னால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அனோஜனின் தாயார் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

”நான் சவூதி தூதரகத்தை மதிக்கின்றேன். அதன்படியே இங்கே வந்துள்ளேன். எனது மகனை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோருகின்றேன். மகனுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம். உங்களை மதித்து கண்ணீர் சிந்தி எனது மகனின் விடுதலைக்காக உங்களை நாடி வந்துள்ளேன். எப்படியாவது மீட்டுத்தாருங்கள். இதனை தவிர வேறெதுவும் வேண்டாம். எனது மகன் செய்த தவறை மன்னித்து வழங்கப்பட்டுள்ள தண்டனையில் இருந்து அவரை மீட்டுத் தருமாறு சவூதி தூதரகத்திடம் நான் பிச்சைக் கேட்கின்றேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *